அன்னை மரியாவின் பண்புகள்

 இயேசுவில் அன்பார்ந்தவர்களே,

 "அம்மா" 

நான் அறிந்த அழகிய கவிதை. இந்த உலகில் எவராலும் ஈடுசெய்ய இயலாத உறவுதான் "அம்மா".சிறப்பா நம் அன்னை மரியாவின் பிறந்த நாள் 431 ஆம் ஆண்டு எபேசு நகரில்நடைபெற்ற பொதுசங்கத்தில் மரியா இறைவனின் தாய் என்று பிரகடனம் செய்த பிறகு  இவ்விழா விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அன்னையின் பண்புகளை அறிந்து நாமும் பின்பற்றி வாழ முயல்வோம்.


1. துணிச்சல் :



அன்னை மரியாவை துணிச்சல் மிக்க ஒரு பெண் என்றால் அது மிகையாகாது.  யூத சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்தும் என்பதை அறிந்திருந்தும், ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு துணிச்சலோடு இயேசுவை தன் வயிற்றில் சுமந்து கொள்ள முன்வந்து தன்னையே கையளித்தள் இந்த அன்னை மரியா.



2. உதவி



தேவையில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டுபவள்தான் இந்த அன்னை மரியா.  தான் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து இருந்த நேரத்திலும், தனது உறவினரான எலுசபெத் கருவுற்று இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து, அந்த பெண்மணிக்கு உதவி செய்வதற்காக பல மைல் தூரம் பயணப்பட்டவள் இந்த அன்னைமரியா.



3. துயரம் துடைப்பவர் :



துயரம் துடைப்பவள் இந்த அன்னைமரியா. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போக திருமண வீட்டாரின் துயரத்தைக் கண்டு, அதனை துடைக்க தன் மகனிடம் பரிந்து பேசியவள் இந்த மரியா.



4. தெளிவு கொண்டவள்:



தெளிவு மிக்கவளும், தெளிவுபடுத்துபவளும் இந்த அன்னைமரியாள். கபிரியேல் வானதூதர் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் பொழுது இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே என்ற கேள்விகளை எழுப்பி, தெளிவைப் பெற்று ஆண்டவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையில் தனக்குள் தெளிவை  ஏற்படுத்திக் கொண்டவள் இந்த அன்னைமரியா.




5. இறை வார்த்தைகளின் தாய்: 



"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே என் தாயும் சகோதரரும் ஆவார்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உயிர் தரும் வகையில்,  ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இணங்கி இயேசு கிறிஸ்துவை தன் வயிற்றில் சுமக்க தன்னையே கையளித்தவள் இந்த அன்னைமரியா.



6. உலகின் தாய் :



அம்மா, இதோ உன் மகன் என்று கூறியபோது, அகிலத்தில் உள்ள அனைவரையும் தன் பிள்ளையாக ஏற்று இன்று வரை நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருப்பவள் இந்த அன்னைமரியா.



இவ்வாறு இன்று அன்னை மரியாவை பற்றி நாம் பலவாறு கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் உண்மையில் இந்த அன்னை மரியாவின் பிறந்த நாளில் நாம் இந்த அன்னை மரியாளுக்கு தரக்கூடிய பிறந்தநாள் பரிசு எது? என்பதை சிந்திக்க நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.

அன்பார்ந்தவர்களே இத்தகைய மேலான பன்புகளை கடைபிடித்த வாழ முயர்ச்சிசெயய்ய நம்மை அன்னை இருகரம் விரித்து அழைக்கின்றார்.

இவ்வாரு வாழ நாம் அன்னை மரியிடம் அன்றாட செபிப்போம். 

புனித ஆரோக்கிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரியே வாழ்க.


Comments