நான் யார்?

 நான் யார்?

        இந்தக் கேள்வி மிகச் சிறியது. ஆனால் ஆழமா சிந்தனைகளைக் கொண்டது. நான் யார் என்று எப்பொழுதும் என்னைக் கேட்டுக்கொள்வதுண்டோ? என்று யோசித்துப் பார்த்தால் .... ஒருவேளை அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.



         நான் நானாய் இருக்க பல சிரமங்களை அடைந்துள்ளேன், சில சமயங்களில் நான் நானாக இருக்கவும் தயங்கியிருக்கிறேன். நான் நானாக இருக்க வேண்டும் என்பதற்காய் பலதை இழந்துள்ளேன். அப்பொழுது நான் புரிந்துக்கொண்டது. நான்

1) கடவுளின் சிறந்த படைப்பு

2) என் பெற்றோரின் பிள்ளை

3) சமுதாயத்தில் ஒரு மனிதன் 

4) மனைவிக்கு கணவன் 

என்ற அத்தனை அடையாளங்களும் கொண்டது என் உடல் மட்டும்தான். ஆனால் அதைவிட முக்கியமானது "நான் ஒரு ஆன்மா".

       உடனடியாக இந்தக் கேள்வியினால் பலன் கிடையாது. ஏனென்றால் நான் ஒரு மனிதன் ; நான் தனி ஒருவன் அல்ல.கோடிகணக்கானவர்கள் என்னில் உள்ளனர் அப்படி என்றால் நான் யார்? இறைவனால் படைக்கப்பட்ட இரத்தமும் சதையையும் கொண்ட ஒர் உயிர்.

       ஆறரிவு கொடுக்கப்பட்டதால் மனிதன் என பெயரிடப்பட்ட ஒரு ஜீவன். ஜம்புலன்களைக் கொண்டு அதை அடக்கி ஆளும் திறன்கள் கொண்ட உன்னதமான உயிர். ஆனால் நான் யார் என்ற கேள்விக்கு ஆழமாக யோசித்து பதில் கூற முயலும் போது எனக்கு கிடைக்கும் பதில் கேள்விகுறிதான். ஏனென்றால் பிறந்தேன்,  வளர்ந்தேன்,  கடமையைச் செய்தேன், கடைசியில் ஒய்வு பெற்று மரனத்திற்காக காத்திருக்கும் சூயநலவாதியான மனிதனா? என்று பார்க்கும் போது "நான் யார்?" என்பது எனக்கு பிடிக்கவில்லை.

பெற்றோர்கள் கூறவேண்டும் நான் யார்?

நண்பர்கள் கூறவேண்டும் நான் யார்?  

உறவுகள் கூறவேண்டும் நான் யார்?

சமூகம்  கூறவேண்டும் நான் யார்? என்று .......

இத்தனை கேள்விகளுக்கு பதில் சுலபமாக பெற முடியாது. நிறைய போராட்டதிற்கு பின் தான் பதில் நம்மை வந்து சேரும். அது வரும் போது நாம் பக்குவ நிலையை அடைந்திருப்போம் அப்போதுதான் என்னால் கூற முடியும் நான் யார்?  என்று அதுவரையில் ..

நீ யார்? என்றான்

நீ யார்?  என்று கேட்டேன்

நான் என்றான்

நான் யார் என்று கேட்டேன்

நீ என்றான்; நான் என்றான்

முடிவில்லாத கேள்வி;

முடிவில்லாத விவாதம்.......

முடிவில்லாத விவாதம்.....

Comments