அடிப்படைச் செபங்கள் - I
சிலுவை அடையாளம்
தந்தை / மகன்/ தூய ஆவியாரின் பெயராலே. /ஆமென்.
மூவொரு கடவுள் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் / மாட்சி உண்டாகுக. /தொடக்கத்தில் இருந்தது போல / இப்பொழுதும் எப்பொழுதும்/என்றென்றும் இருப்பதாக. /ஆமென்.
நிலையான புகழுக்குரிய
நிலையான புகழுக்குரிய தூய்மைமிகு நற்கருணைக்கு எல்லாக் காலமும் ஆராதனையும் புகழும் மாட்சியும் உண்டாகக்கடவது.
இயேசு கற்றுத் தந்த மன்றாட்டு
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல. மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். / ஆமென்.
தூதுரை மன்றாட்டு
அருள் நிறைந்த மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே./ பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. /உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் / ஆசி பெற்றவரே.
புனித மரியே /இறைவனின் தாயே/பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் / வேண்டிக்கொள்ளும். / ஆமென்.
நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் தூய ஆவியால் கருவற்று/ கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்/சிலுவையில் அறையப்பட்டு /இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள்/ இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி / எல்லாம் வல்ல தந்தையாகிய /கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலைவாழ்வை நம்புகின்றேன். / ஆமென்.
மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே/நன்மை நிறைந்தவர் நீர் / அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. / என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும் நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் / மனம் வருந்துகிறேன்./உமது அருள் உதவியால்/இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும்/பாவத்துக்கு ஏதுவான சுழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும்/ உறுதி கூறுகிறேன். / ஆமென்.
கடவுளின் ஆறு சிறப்பான பண்புகள்
1. கடவுள் தாமாகவே இருக்கிறார்.
2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
3. உடலும் உருவமும் இல்லாமல் இருக்கிறார்.
4. அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாய் இருக்கிறார்.
5. எங்கும் நிறைந்து இருக்கிறார்.
6. எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணமாய் இருக்கின்றார்.
பத்துக் கட்டளைகள்
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். /எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை / வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடிப்பதில் / கருத்தாய் இரு .
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட
5. கொலை செய்யாதே.
6. விபசாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்.
முதலாவது / அனைத்திற்கும் மேலாக / கடவுளை அன்பு செய்வது.
இரண்டாவது / தன்னை அன்பு செய்வது போல/ பிறரையும் அன்பு செய்வது.
திரு அவையின் ஒழுங்குமுறைகள்
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும்/ திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்:/ இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது / தகுந்த தயாரிப்புடன் / ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று, /நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் / இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும்; / நோன்பு நாள்களில் / ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும் / திருமணத் தடை உள்ள உறவினரோடும்/ திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற / நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
Comments