அடிப்படை கேள்வி - பதில்கள் -I

திருமறைச் சுவடி


I.மனித வாழ்க்கையும் கடவுளும்

மனிதர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்ச்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில்தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.

2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்துகொள்ள முடியும். சிறப்பாக, இறைவெளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்துகொள்ளலாம்.

3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.

4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும்?
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவ அன்பு செய்ய முடியும்.

5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
தாம் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

6. எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.

7. நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்ததுபோல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

II. மீட்புக்குத் தயாரிப்பு
    
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

8. அனைத்தையும் படைத்தவர் யார்?
கடவுள்.

9.கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

10. வானதூதர் என்பவர் யார்?
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெருமகிழ்வில் பங்குபெறுபவர்களே வானதூதர் ஆவர்.

11. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

12. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?
கடவுள் தம்முடைய அன்பையும், ஞானத்தையும், வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். . மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

13. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

14. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந் தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவு மனிதரைப் படைத்தார்.

15. பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுல் மனிதருக்கு அளித்த கொடை என்ன?
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்றும் அழைக்கிறோம்.

16. மனிதர் இந்நிலையை எவ்வாறு இழந்தனர்?
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாஷ் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

17. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2. கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர்.
3. பாவ நாட்டம், துன்பம்,இறப்பு முதலிய இன்னல் களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

18. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டு விட்டாரா?
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.

III. இயேசு கிறிஸ்து உலக மீட்பர்
          கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோரின் குற்றத்தைத் தொடர்ந்து, மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை, மோசே தலைமையில் மீட்டு, சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். வாக்களிக்கப்பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையைப் பல முறை மீறினார்கள்; கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை; மாறாக, இறை வாக்கினர்களை அனுப்பி, மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார். எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.

19.கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து.

20. இயேசுகிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள்
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்படிக் அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்."

21. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

22.இயேசு எந்த ஊரில் பிறந்தார்?
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

23. இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான புனித மரியா.

24. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?
தூய ஆவியின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார்.

25. இயேசுவின் தந்தை யார்?
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.




Comments