முதல் நற்கருணை விழாத் திருப்பலி

 முதல்

 நற்கருணை

 விழாத் திருப்பலி





முன்னுரை

           கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மனிதர் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்வாழ மட்டுமன்று, உறவு வாழ்விற்கும் அடித்தளமிடுகிறது உணவு. உயிர் வாழவும், உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல், நாம் அருளுயிரைப் பெற்று இறை உறவிலும், மனித உறவிலும் செழித்து வளர, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்த ஒப்பற்ற உணவே நற்கருணை. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” என்கிறார் இயேசு.

           ஆம், நற்கருணை விருந்தில் நாம் பங்கேற்கின்ற போது, நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஆழப்படுத்துகின்றது. நமக்கும் பிற மனிதருக்கும் உள்ள உறவுகள் வளர்ச்சி அடைகின்றன, உறுதியடைகின்றன. இதனோடு நம்முடைய ஆன்மாவிற்கும் உறுதி கிடைக்கின்றது. நம்முடைய ஆன்மாவினால் தான் நாமும் உறுதிப் பெறுகின்றோம். இத்தகைய உறவு வாழ்வில் வளர, நற்கருணைத் திருவிருந்தில் முதல் முறையாக இன்று பங்கேற்கின்ற எங்களது மகன்/மகள் க்காக இத்திருப்பலியில் செபிக்க அவனை ஆசீர்வதிக்க அழைக்கின்றோம். உங்களது பிரசன்னம் எங்களுக்கு நம் மீட்பரையே பிரசன்னப்படுத்துகின்றது. உங்களை எம்குடும்பத்தார் சார்பிலே வரவேற்கின்றேன். குருக்கள் பவனியாக வர, நாம் அனைவரும் எழுந்து நின்று மகிழ்வுடன் இறைவனைப் புகழ்ந்து பாடுவோம்.

மன்றாட்டுக்கள்:

1. நல்லவரே இறைவா! பயணம் செய்யும் திருஅவையை ஆசீர்வதியும். திருஅவையின் பொறுப்பாளர்கள் தாங்களும் தங்களது நம்பிக்கையில் உறுதிப் பெற்று, உறுப்பினர்களையும் உறுதிப்படுத்தும் அருள்பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நலன்களின் நாயகனே இறைவா! வளமான பாதத்தை ஆசீர்வதியும். எல்லா வளங்களையும் பாதுகாத்து, பராமரித்து, அடுத்த தலைமுறையினருக்கு நிறைவாய் விட்டுச் செல்லும் விழிப்புணர்வு பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உறவின் உன்னதரே இறைவா! ஒன்று கூடியுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் உறவுக்கு உண்மையான மதிப்பு கொடுத்து, கூடினோம் கலைந்தோம் என்றில்லாது, தொடர்ந்த நல்ல உறவிலே ஒன்றுபட்டு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நற்கருணையின் தெய்வமே இறைவா! உம்மை அருள்செல்வனுக்கு பகிர்ந்து கொடுத்துள்ள இந்நாளிலே, இவனும் தன் வாழ்வில் தான் பெற்ற வரங்களால், கனிகளால் பிறர் வாழ்வு பெற தன்னை முழுவதுமாய் கையளித்து வாழும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உணவான உத்தமரே இறைவா! உம்மை பெற்றுவரும் பாக்கியம் பெற்ற மக்கள் நாங்கள் எல்லாரும் மற்றவர்களுக்கு முக்மாதிரிகையாய் இருந்து உம்மை உலகுக்கு வழங்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Comments